×

பிரதமர் மோடிக்கு எதிராக 'Go back modi' போஸ்டர்

 

பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வரவுள்ள நிலையில் மாநகரம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'Go back modi' போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மதியம் 4:30 மணிக்கு பாரதப் பிரதமர் பங்கேற்க உள்ளார் அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமகஅன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். புதுச்சேரி மற்றும்தஞ்சாவூர் நிகழ்ச்சிகளை முடித்து தஞ்சாவூர் விமானபடை தளத்தில் இருந்து  ராணுவ சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு 2:45 மணிக்கு பிரதமர் வருகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூபாய் 4,400 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 
தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க உள்ளார். 

இந்நிலையில் பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வரவுள்ள நிலையில் மாநகரம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'Go back modi' போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “தமிழ்நாடு ஒற்றுமையாக நிற்கிறது, மத ரீதியான மூளை சலவை வேண்டாம், திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை” உள்ளிட்ட வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.