“60 ஆண்டுகளுக்கு பின் தவெக அரசு ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது”- ஜி.கே.வாசன்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவிற்கு தமாகா ஆதரவு அளித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஒரு நேர்மையான ஆட்சி தொடங்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். 60 ஆண்டுகளுக்கு பின் தவெக அரசு ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறைந்த நாட்களிலேயே மக்களுக்கு அதிக நம்பிக்கை தந்துள்ள முதலமைச்சர் விஜய். தமாகா நிர்வாகிகள் சொன்னதால் தவெக அரசின் நல்ல தூய முயற்சிக்காக ஆதரவு அளிக்கிறோம்.தவெக இடைத்தேர்தலில் தவெக ஆதரவு கேட்டார்கள், கொடுத்து விட்டேன். இடைத்தேர்தலுக்கு தவெக ஆதரவு கேட்டதால் ஆதரவு அளித்தேன். தவெக அரசு மக்கள் நலன் சார்ந்து 100 நாட்களை நிறைவு செய்து நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்ததை நானே மறந்துவிட்டேன்” என்றார்.