×

என்றுமே தேசியத்தின் பக்கம் நிற்கும் ஜி.கே.வாசன் - அண்ணாமலை 
 

 

தமாகா உடன் கூட்டணி நமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்களின் அன்பைப் பெற்ற தலைவர்களில் ஒருவரான, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மரியாதைக்குரிய திரு  @GK__Vasan அவர்களை  @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு  @MenonArvindBJP அவர்களுடன் சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரும் அவரது முடிவுக்கு நன்றி தெரிவித்தோம்.