×

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிய த.மா.க.! காரணம் என்ன..? ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி

 

என்டிஏ  கூட்டணியில் இருந்து நட்பு கட்சியாகவே விலகுகிறது த.மா.கா என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “கூட்டணி அரசியலில் இயக்கத்தின் வளர்ச்சி குறைவதாக நிர்வாகிகள் கருதுகிறார்கள். தனித்தன்மையோடு கட்சி செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் வரும் வரை எங்கள் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும். இனி தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி என சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்டிஏ  கூட்டணியில் இருந்து நட்பு கட்சியாகவே விலகுகிறது த.மா.கா. த.மா.கா-வால் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. த.மா.கா பங்கேற்ற கூட்டணியும் வெற்றிப் பெறவில்லை. பா.ஜ.க, அ.தி.மு.கவுடன் எந்த சண்டையும் இல்லை. தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றத்தால் அனைத்து கட்சிகளுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 600 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் 450 பேர் த.மா.கா தனித் தன்மையுடன் செயல்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கட்சியை பலப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தமிழ்நாட்டில் கூட்டணி தர்மத்துக்கு எடுத்துக்காட்ட செயல்பட்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். பல்வேறு சவால்களைத் தாண்டி வெற்றிக்காக பொறுப்புணர்ச்சியோடு தமாகா பணியாற்றி்து.12 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணியில் இருந்ததால் எங்கள் வலு குறைந்து விட்டது” என்றார்.