×

“2021-ல் இரட்டை இலை; 2026-ல் தாமரை! ஏன் இந்த மாற்றம் ?” - வாசன் பதில் 

 

தேர்தல் நேரத்தில் இது போன்ற சங்கடங்கள் வரும்.. தலைவர்களாக இருக்கட்டும், நிர்வாகியாக இருக்கட்டும் அவர்களும் மனிதர்கள் தானே என தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் தேசிய அளவில் தாமரை சின்னம் இரட்டை இன்ஜின் சின்னம் என்பதாலும், பாஜகவுடன் நாங்கள் நேரடி கூட்டணியில் இருப்பதாலும்
அவர்களின் சின்னத்தில் போட்டியிடுகிறோம். காமராஜர் ஆன்மா இனி காங்கிரஸை மன்னிக்கவே மன்னிக்காது. காமராஜர் எமர்ஜென்சி காலத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டார். இன்று காங்கிரஸ் எந்த கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது என்பதை மட்டும் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்” என்றார்.