×

அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும் - ஜி.கே.வாசன் வாழ்த்து

 

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் முதல் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.