தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - ஜி.கே.வாசன் இரங்கல்
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது தமிழக அரசு மருத்துவமனைகளில் இது போன்ற விபத்து இனிமேல் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 3 வயது சிறுவன், 3 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. பலர் பலத்த காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவமனையின் கீழ்தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்துச் சிதறியால் தீ ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மருத்துவமனையின் நோயாளிகள், உதவியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.