×

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது - ஜி.கே.வாசன் கண்டனம்

 

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திடீரென அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர்.  தருவைகுளத்தை சேர்ந்த பரலோக திரவியம், உதயகுமார் உள்ளிட்ட 12 மீனவர்கள் கைது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.