சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க மாட்டேன் - ஜி.கே.மணி
பாமக என்றாலே ராமதாஸ்.. ராமதாஸ் என்றாலே பாமக.. இதுதான் ஊரறிந்த, நாடறிந்த உண்மை என பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “மருத்துவர் அய்யா சொன்னா தான் பா.ம.க.வினர் மட்டுமின்றி அவருக்கு ஆதரவாக இருக்கும் கட்சி சார்பற்ற மக்களும் வாக்களிப்பார்கள்.. இன்று முதல் ராமதாஸ் தரப்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு வழங்கப்படவுள்ளது. விருப்பமனு தொகை பொதுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ரூ.1,000 கட்டணமும், தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ரூ.500 கட்டணமும், பெண் வேட்பாளருக்கு ரூ.500 கட்டணமும் பெறப்படும்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் விருப்ப மனு அளிக்கப்போவதில்லை.. ராமதாஸ் எடுக்கும் முடிவுதான். பாமக என்றாலே ராமதாஸ்.. ராமதாஸ் என்றாலே பாமக.. இதுதான் ஊரறிந்த, நாடறிந்த உண்மை’ என்றார்.