வீட்டிலேயே பிரசவம் - இளம் பெண் பரிதாப பலி
திருப்பூர் அருகே யூடியூப் மூலம் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர், ஊத்துக்குளி அருகே யூடியூப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொண்டதில், 32 வயதான சசிகலா என்ற பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருந்த நிலையில், 2வது குழந்தையை இயற்கை முறையில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு எடுத்ததால் விபரீத சம்பவம் நடந்துள்ளது. கணவர் மற்றும் மாமியார் சேர்ந்து பிரசவம் பார்த்ததில் அதீத ரத்தப் போக்கு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறந்த குழந்தை தற்போது அரசு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. பிரசவத்திற்கு பிறகு நஞ்சு கொடி வெளியேறாமல் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தை நலமாக இருக்கிறது.