☰
×

செஞ்சி சிறுமி மாயம்- அதிமுக சார்பில் நாளை போராட்டம்

 

செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் போராட்டத்தை அறிவித்துள்ளது அதிமுக.  அதிமுக சார்பில் ஆலம்பூண்டியில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நாளை போராட்டம் நடைபெறும். 14 நாட்களை கடந்தும் சிறுமி மாயமான வழக்கில் முன்னேற்றம் இல்லாததைக் கண்டித்து போராட்டம் நடதத்துவதாக அதிமுக அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி(வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளாள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதுடன், சிறுமியை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.