☰
×

உயிரை கையில் பிடித்து வாழும் பெண் பிள்ளையை பெற்றவர்கள்! கையை கடித்து தப்பிய சிறுமி

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி கிராமத்தில் 7 வயது சிறுமியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கடத்த முயன்ற சம்பவம்  பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் கண்டமானடி கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிததுள்ளனர். பைக்கில் ஏற்றி சென்றபோது சிறுமி கத்தி கூச்சல் போட, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்களை துரத்தியுள்ளனர். கடத்தியவர்கள் உடனே வாயை பொத்த சிறுமி அவர்கள் கையை கடித்ததால் வலி தாங்க முடியாமல் இறக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.  விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் ஒரே மாதத்தில் நான்காவது குழந்தையை கடத்த முயன்ற சம்பவத்தால் பொதும்மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. 

இதனிடையே இச்சம்பவம் குறித்து சிறுமி கூறுகையில், "இரவு நான் அங்க பட்டாசு வெடிச்சிட்டு இருந்தேன், அப்போ 2 பேர் திடீர்னு என்ன வாய பொத்தி பைக்ல கூட்டிட்டு போய்ட்டு இருந்தாங்க.. நான் உடனே அவங்க கைய கடிச்சிட்டு கத்துன. அதனால என்ன அப்டியே இறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க.." என்றார்.