×

பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி உயிரிழப்பு! ஏஞ்சல் உடையில் சோகம்

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேதுபதி நகரை சேர்ந்த இளங்கோ-பவானி தம்பதியின் மகளான தேஜஸ்ரீ பள்ளியில் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்தார். மானாமதுரை  சேதுபதி நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ- பவானி தம்பதியரின் மகள் தேஜாஸ்ரீ (வயது 5). இவர் மானாமதுரை தனியார் ( பாபா மெட்ரிக்) பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வந்தவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல் உடற்கூறாய்வு செய்ய சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உயிரிழப்பு உறவினர் மட்டுமல்லாமல் மானாமதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.