கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு திமுக விரும்பவில்லையா?- கிரிஷ் ஜோடங்கர்
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக தரப்பிலிருந்து தயக்கம் இருக்கிறதா அல்லது அவர்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை விரும்பவில்லையா ? என்று கேள்வி முன்வைக்கப்பட்ட போது அது தொடர்பாக தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது என்று தமிழக காங்கிர மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிர மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், “பேச்சுவார்த்தை நடத்த திமுகவுக்கு தயக்கம் உள்ளதா என தெரியாது, ஆனால் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை திமுக விரைவில் தொடங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியுடைய தலைவர்கள் தெரிவிக்கும் வருத்தமே இதுவரைக்கும் பேச்சு வார்த்தை குழு திமுக அமைக்கவில்லை என்பது தான். எனவே பேச்சுவார்த்தைக் குழுவை விரைவாக திமுக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம். அதேவேளையில் திமுக மீது நாங்கள் விமர்சனங்களை வைக்கவில்லை மாறாக எங்களிடம் இருக்கும் வருத்தங்களை பதிவு செய்கிறோம்.
குறிப்பாக தேர்தல் தொடர்பாக இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று அது தொடர்பான இருக்கும் சிரமங்களை நாங்கள் எடுத்துரைத்தோம். எனவே விரைவாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் வேட்பாளர்கள் உள்ளிட்ட எல்லாம் தேர்ந்தெடுப்பதற்கு உரிய நேரம் வேண்டும் என்பதை நாங்கள் எடுத்துரைத்தோம். எனவே விரைவாக பேச்சுவார்த்தைக்கான அந்த குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் நாங்கள் வலியுறுத்துகிறோம். கூட்டணி பேச்சு வார்த்தை விரைந்து முடிக்க வேண்டும். பின்பு அகில இந்திய தலைவர்கள் தமிழக வருவார்கள். இன்று அகில இந்திய தலைவருடன் விவாதித்த விஷயங்களை நேரடியாக திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரிடமும் எடுத்துரைப்போம்” என்றார்.