×

“எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்"- கனிமொழியை சந்தித்த பின் கிரிஷ் சோடங்கர் பேட்டி

 

சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியுடன் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்தார். நேற்று (பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியிருந்தார்.

கனிமொழியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து பேசவில்லை. தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து மட்டுமே விவாதித்தோம். தொகுதிப் பங்கீடு மற்றும் மாநிலங்களவைத் தேர்தல் பற்றி மட்டுமே பேசினோம். மரியாதை நிமித்தமாக திமுக எம்பி கனிமொழியை சந்தித்தேன். எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்” என்றார்.