×

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றது பொதுக்குழு!

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் வாசிக்கப்பட்ட தீர்மானத்தில், ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. *முதல்வர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அறிவிக்கப்பட்டது ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. *கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்த முதல்வர், மத்திய அரசுக்கு நன்றி என அதிமுக பொதுக்குழுவில் மூன்றாவது
 

அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் வாசிக்கப்பட்ட தீர்மானத்தில், ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*முதல்வர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அறிவிக்கப்பட்டது ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

*கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்த முதல்வர், மத்திய அரசுக்கு நன்றி என அதிமுக பொதுக்குழுவில் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20% இட ஒதுக்கீடு முறைப்படுத்திய முதல்வருக்கு பாராட்டு

*தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்த அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*முதல்வர் பழனிசாமி விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

*கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் முடிவு செய்ய ஓபிஎஸ் -ஈபிஎஸ் என்று பொதுக்குழுவில் அதிகாரம்.

*இலங்கையில் மாகாண கவுன்சில் முறையை ரத்து செய்யப் படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு.

*நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் தமிழகத்தை சேர்த்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி.

*நிவர், புரெவி விவசாயிகளுக்கு ரூ 600 கோடி நிவாரணம் வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு

*பொங்கல் பரிசுத் தொகை ரூ. 2,500 வழங்கியதற்கு பாராட்டு

*தமிழகத்தில் வாரிசு அரசியலை வீழ்த்த தீர்மானம்

*சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றயதற்கு முதல்வர் , துணை முதல்வருக்கு பாராட்டு

*அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றதற்கு பாராட்டு

*தமிழகத்தில் பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு

*டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு