×

``Gen Z-க்களை தவறாக வழிநடத்துகின்றனர்’’- ஆளுநர் அர்லேகர்

 

Gen Z இளைஞர்களை பலர் தவறாக வழிநடத்துகிறார்கள். டெல்லிக்கும், இங்குள்ள இளைஞர்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் அர்லேகர், “அனைவருக்கும் பட்டம் வழங்குவது தான் முறையாக இருக்கும். ஆளுநர் கையால் தான் பட்டம் வாங்குவேன் என கூறியதில் தவறில்லை. சில தவறான புரிதலால் பிரச்சினை எழுந்துள்ளது. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். Genz இளைஞர்களை பலர் தவறாக வழி நடத்துகிறார்கள். ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களுக்கும் இங்குள்ள இளைஞர்களுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அமைதியாக இந்த பட்டமளிப்பு விழா நடந்து முடிந்துள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு என தனி கலாச்சாரம் உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் அனைவருக்கும் ஆளுநர் சான்றிதழ் வழங்க மாணவர்கள் வலியுறுத்தியிருந்திய நிலையில், சான்றிதழ் விவகாரத்தில் மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் மாளிகைக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட தகவல் தொடர்பு பிரச்சனையால் இந்த சர்ச்சை ஏற்பட்டது” என்றார்.