☰
×

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெம் வீரமணி

 

புதிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். புதிதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜெம் வீரமணி மீது மொத்தம் 5 போக்சோ வழக்குகள் உள்ளன. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டார்.


சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்பு பிரிவில் பெறப்பட்ட Pendrive-ல் ஜெம் கிரணைட் தொழிலதிபர் வீரமணி என்பவர் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரது வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக Pendrive-வில் பதிவாகியிருந்த வீடியோவில் வீரமணி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற மேலும் ஒரு வீடியோவை வைத்திருந்தது தொடர்பாக அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து அண்மையில் ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரணைட் வீரமணியின் ஓட்டுநர் கள் 1.லாசர், 2.பார்த்திபன் மற்றும் 3.பாபு ஆகியோர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.