“பெண் பாதுகாப்பை பற்றி பேசும் விஜய்யின் மனைவிக்கே பாதுகாப்பு இல்லை”- கீதா ஜீவன்
'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குகூட அவர் குரல் கொடுக்கவில்லை. அவர் எப்படி ஜனநாயக ஆட்சி நடத்தப்போகிறார் எனத் தெரியவில்லை என அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்.
திமுக கூட்டணி கட்சி சார்பில் தூத்துக்குடியில் பூபாலராயபுரம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது திராவிட மாடல் அரசின் 5 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். நான் 96-ல் இருந்து அரசியல்ல இருக்கேன். வருகின்ற ஆகஸ்ட் வந்தா 30 வருஷம் முடியுது. எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 75 வருஷம் முடிஞ்சது. ஆனா ஒரு வருஷம் கட்சி தொடங்கிட்டு, நான் தான் முதலமைச்சர், நான் தான் முதலமைச்சர்னு சிலர் வர்றாங்க. ஆனா பாஜக என்ற வார்த்தைய சொல்ல பயந்து சாகிறார்கள். பாஜக என்ற வார்த்தையே சொல்ல மாட்டாங்க. அவர்கள் பிரச்சாரத்தின் போது கரூரில் இறந்த 41 பேர், வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர் கீதா ஜீவன், மேலும் இவர் பெண் பாதுகாப்ப பத்தி சொல்றாரு. இவருடைய மனைவிக்குமே பிள்ளைங்களுக்குமே பாதுகாப்பு அளிக்கல.... மேலும் ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகுறது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு, அதுக்கே குரல் குடுக்கல. இவரு என்ன ஜனநாயக ஆட்சி நடத்தப் போறார்னு தெரியல. என அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக சாடினார்.