×

“போதை பொருட்கள் பயன்படுத்துவதைவிட இது ஒரு பெரிய குற்றமா?”- கீதா ஜீவன்

 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தார் என்ற ஒரே காரணத்துக்காக திருச்செந்தூர் எம்எல்ஏ-வும் திமுகவின் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசு கைது செய்திருப்பது கடும் கண்டத்துக்குரியது என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தார் என்ற ஒரே காரணத்துக்காக திருச்செந்தூர் எம்எல்ஏ-வும் திமுகவின் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசு கைது செய்திருப்பது கடும் கண்டத்துக்குரியது. கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு... அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதை பயன்படுத்து வீடியோ வெளியானபோது ஒப்புக்குக்கூட விசாரணை நடத்தாத தவெக அரசு...  ஒரு மேடை பேச்சுக்காக அனிதா ராதாகிருஷணன் அவர்களை கைது செய்திருக்கிறது. பாலியல் குற்றத்துக்கு துணை போவதைவிடவும் போதை பொருட்கள் பயன்படுத்துவதைவிடவும் மேடை பேச்சு மாபெரும் குற்றமாக கருதுகிறாரா முதல்வர் விஜய்? தமிழக வாஷிங் மெஷின் கழகமாக மாறிவிட்ட தமிழக வெற்றிக் கழகம்.. தமிழக பாசிச கழகமா உருவெடுக்கிறதா என்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.