×

கைலாசாவில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி! கலாய்க்கும் காயத்ரி

 

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT Wing) தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  இதேபோல் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப செயலாளர் திலீப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து பாஜக நிர்வாகிகள் பலர், அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி, தனது டிவிட்டர் பக்கத்தில்,  “கூட்டணியில் இருந்தபடி அதிமுக இதை செய்திருக்கக்கூடாது, பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுகவில் அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் இனி பாஜகதான். அண்ணாமலை தலைமை கீழ் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்கும்” என எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், “நித்யநாதாவின் ஐக்கிய நாட்டின் கைலாச பிரதமரும் முதலமைச்சரும் இல்லாமல் ஃப்ரீயா இருக்கிறது. உங்களுக்காக ஒரு பிரதமர் போஸ்ட் மற்றும் அண்ணாமலைக்கு ஒரு முதல்வர் போஸ்ட் பார்சலை நான் கோர முடியும். ஆன்மீகத்துடன் மக்களுக்கு சேவை செய்யலாம் ஐக்கிய நாட்டின் கலைசாவில். உங்க இருவர் பதவி பைத்தியக்காரத்தனம் நித்யானந்தாவால் விவேகமான புரிதலுடன் கையாளப்படும்.