×

இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட பயந்த பயந்தாங்கோலி அண்ணாமலை! காயத்ரி விளாசல்

 

காயத்ரி ரகுராமுக்கும் அண்ணாமலைக்குமான மோதலில் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.  இந்த நிலையில் கட்சியை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருந்தார் காயத்ரி ரகுராம்.  அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார் அண்ணாமலை.

பாஜகவில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டதால் விரக்தியில் இருந்த காயத்ரி ரகுராம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னுடன் போட்டியிடுமாறு அண்ணாமலையை வலியுறுத்திவந்தார். அதற்கு அண்ணாமலை தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், மீண்டும் மீண்டும் அண்ணாமலையை டிவிட்டரில் விமர்சித்துவருகிறார் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம்.

தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வாட்ச் பில் காட்ட பயந்த பயந்தாங்கோலி அண்ணாமலை. BGR Energy ஆதாரம் காட்ட பயந்த பயந்தாங்கோலி அண்ணாமலை. பதவிக்காக நீங்கள் ஹனிட்ராப் செய்து மற்றவர்களை அச்சுறுத்தினீர்கள் பயந்தாங்கோலி அண்ணாமலை. இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட பயந்த பயந்தாங்கோலி அண்ணாமலை.

நான் இல்லாத போது என்னை கேவலப்படுத்தும் வகையில் பொய்யான கதைகளை பேசிவிட்டு, கட்சியில் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமை பட்டு என்னை இடைநீக்கம் செய்து,அடி ஆள் வைத்து என்னை பற்றி தவறாக பேச வைத்த பயந்தாங்கோலி அண்ணாமலை. நான் தான் எதிர்க்கட்சி. ஆனால் இப்போது அண்ணாமலை பூஸ்.

ஆட்டோ பிடித்து ஓடிப்போன பயந்தாங்கோலி அண்ணாமலை, விமான அவசர கதவை திறந்தத்த பார்த்த பொய்யர் பயந்தாங்கோலி அண்ணாமலை. கெஞ்சி z வகைப் பாதுகாப்பை வாங்கின பயந்தாங்கோலி அண்ணாமலை. 1 அடி தண்ணீருக்காக படகில் அமர்ந்த பயந்தாங்கோலி அண்ணாமலை” என பதிவிட்டுள்ளார்.