×

அண்ணாமலையால் பெண்களுக்கு மட்டுமல்ல பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை- காயத்ரி ரகுராம்

 

பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவர்கள் சட்டபூர்வமாக கைது செய்திருக்க வேண்டும் என நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றபோது விமானத்தின் அவசரகால கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியானது. தேஜஸ்வி சூர்யாவுடன் அண்ணாமலையும் பயணித்ததாக தெரிகிறது. இச்சம்பவம், ஒன்றிய அரசின் தலையீட்டால் மூடி மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தொடர் அழுத்தத்தால் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை டிவிட்டரில் விமர்சித்துள்ள நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், “யார் செய்த சேட்டை ? எங்க ________ செய்த சேட்டை. நினைவிருக்கிறதா? இது தேசிய குற்றம். பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவர்கள் சட்டபூர்வமாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செல்வாக்கு அவர்களை காப்பாற்றியது. அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன். இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள். 

பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு. கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிரையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கை பார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம்” என விமர்சித்துள்ளார்.