அக்டோபர் 1 முதல் கேஸ் மானியம் கட்? உடனே இதை செய்யுங்க... இல்லனா சிலிண்டர் விலை ரூ.950 ஆடும்!
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர், தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் கட்டாயப்படுத்தி உள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் சுமார் ₹950-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு மானிய விலை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒருசிலர் பல்வேறு கேஸ் இணைப்புகளை ஒரே சமயத்தில் பெற்றுக் கொண்டு, கூடுதலான மானியங்களை பெற்று வருவதாக, குற்றச்சாட்டு எழுந்திருந்தது. எனவே, இதனை சரி செய்வதற்காக, மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. பலமுறை காலக்கெடுவையும், நீட்டித்தது. இந்த காலநீட்டிப்பின் பயனாக கடந்த 19-ம்தேதி நிலவரப்படி 27.43 கோடி வீட்டு உபயோக நுகர்வோர், அதாவது மொத்தத்தில் 89.9 சதவீதம் பேர், பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை முடித்து விட்டனர். இன்னும் 10 சதவீதம் பாக்கி உள்ளது. அவர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ம்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஏற்கனவே பயோமெட்ரிக் சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்திருந்தால், மீண்டும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் பெறுவதற்கான முன்பதிவுகள் முன்பைப் போலவே தொடரும்.
வருகிற 1-ம்தேதிக்குள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்காத எரிவாயு நுகர்வோருக்கு மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது (கேஸ் மானியம்) என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் மானிய விலையில் 14.2 கிலோ சிலிண்டர்களைப் பெற முடியாது. நீங்கள் சந்தை விலையிலேயே சிலிண்டர்களை வாங்க வேண்டியிருக்கும் அல்லது சிறிய சிலிண்டர்களை (5 கிலோ / 10 கிலோ) மட்டுமே பெற முடியும். (குறிப்பு: உங்களது கேஸ் கனெக்ஷன் ரத்து செய்யப்படாது, மானியம் மட்டுமே நிறுத்தப்படும்)
(e-KYC) எப்படி செய்வது?
* கேஸ் ஏஜென்சி மூலம்: உங்களது சமையல் எரிவாயு விநியோகஸ்தர் (Indane, Bharat Gas, HP) அலுவலகத்திற்கு ஆதார் கார்டு மற்றும் கேஸ் புக் எடுத்துச் சென்று விரல் ரேகை (Biometric) மூலம் சரிபார்க்கலாம்.
* டெலிவரி ஊழியர் மூலம்: சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்களிடமும் இதற்கான மொபைல் செயலி இருக்கும். அவர்கள் மூலமும் உங்கள் வீட்டிலேயே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கலாம்.
* ஆன்லைன் / மொபைல் ஆப்: கேஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் (உதாரணமாக: IndianOil One app) மூலமாகவும் 'Face Authentication' (முக அங்கீகாரம்) வசதியைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே இ-கேஒய்சி செய்ய முடியும்.
* டெலிவரி ஊழியர் மூலம்: சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்களிடமும் இதற்கான மொபைல் செயலி இருக்கும். அவர்கள் மூலமும் உங்கள் வீட்டிலேயே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கலாம்.
* ஆன்லைன் / மொபைல் ஆப்: கேஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் (உதாரணமாக: IndianOil One app) மூலமாகவும் 'Face Authentication' (முக அங்கீகாரம்) வசதியைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே இ-கேஒய்சி செய்ய முடியும்.
மேலும் எல்பிஜி சேவைகள் தொடர்பான உதவிகளுக்கு, 1800 2333 555 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை நுகர்வோர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.