பதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 'எரிவாயு இணைப்பு இரசீது' கட்டாயம் இல்லை
புதிய மின்னணி குடும்ப அட்டை பெற எரிவாயு இணைப்பு ரசீது கட்டாயம் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பதிய குடும்ப அட்டை (Ration card ) வேண்டி விண்ணப்பம் செய்தால் 'எரிவாயு இணைப்பு இரசீது ' கட்டாயம் இல்லை. எரிவாயு இணைப்பு இரசீது கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. மக்கள் சாசனம் 2018ன் படி புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 60 நாட்கள் என கால வரையறை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குடும்ப அட்டை விண்ணப்பம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை கட்டாய ஆவணமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். குடும்ப அட்டை பெற விரும்புவோர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையுடன் எரிவாயு இணைப்பு ரசீது, சொத்துவரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீதி ஆகிய
ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கும்போது முகவரி ஆதாரமாக வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.