×

‘கூலி’ ரஜினி லுக்கில் விநாயகர் சிலை

 

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ரஜினி ரசிகர் ஒருவர் கூலி பட ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் உருவான விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தேவா கதாபாத்திரத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார் மண்பாண்ட கலைஞர். உடுமலை அருகே பூளவாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மண்பாண்ட கலைஞர் விநாயகர் சதுர்த்தி வருவதை ஒட்டி ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை தழுவி களிமண்ணால் விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கி உளளார். பல்வேறு தோற்றத்தில் காட்சியளிக்கும் விநாயகர் தற்போது ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினிகாந்த் மீதுள்ள பற்றால் அவருக்கு இதுபோன்ற சிலை அமைத்ததாக அந்த கலைஞர் கூறியுள்ளார்.