×

பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

 

விநாயகரின் பிறந்தநாள் விழா, விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும், சிலை விற்பனையும் களைகட்டி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கொளத்தூர்ப் பூம்புகார் நகரில் விநாயகர்ச் சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.

2 ஆயிரத்து 300 பித்தளைத் தட்டுகள், ஆயிரத்து 500 குங்கும சிமிழ்கள் மூலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட 42 அடி விநாயகர்ச் சிலை வைக்கப்பட்டுப் பூஜை செய்யப்பட்டது.

இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்தனர்.