×

மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் என புகார்-போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கிய டோக்கன்கள், ஆவணங்கள்

 

திருப்பூரில் உள்ள மனமகிழ் மன்றத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் டோக்கன்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலாளர் கைது செய்யபட்டார்.

திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் "தி திருப்பூர் கிளப்" என்ற பெயரில்,  மனமகிழ் மன்றம் ஆனது  செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த தனியார் மனமகிழ் மன்றத்தில் 500க்கும்  மேற்பட்ட  தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வாழ்நாள் உறுப்பினர்களாக இருந்து வரும் நிலையில், இங்கு உறுப்பினராக உள்ளவர்கள்  தங்களுடைய நேரத்தை செலவீடு செய்வதற்காக டென்னிஸ்,  பேஸ்கட் பால் போன்ற விளையாட்டு வகைகள் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த கிளப்பில் உள்ள ஒரு அறையில் டேபிள் அமைத்து பலர் சீட்டு ஆடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.