×

நிதியுதவியை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன. அவை, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும். மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி மீண்டும் ஏற்றப்பட்டு இருப்பது நிதி
 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன. அவை, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும். மத்திய கலால் வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி மீண்டும் ஏற்றப்பட்டு இருப்பது நிதி நிலையை பாதிக்கும். கலால் வரி முறையில் முந்தைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் மேல் வரி அளவு மீண்டும் ஏற்பட்டிருப்பது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிக்கும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று மேல் வரியில் முந்தைய நிலையை தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சேலம், தென் மாவட்டங்களில் தலா ஒரு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். தமிழகத்தில் சர்வதேச நிதி நிறுவனத்தை ஏற்படுத்தி திட்டத்தை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.