×

#BREAKING: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்ததேயன்றி முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. ஊரடங்கு அமலில் இருக்கும் போதே நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு வரும் 24ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால், ஊரடங்கை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இரு கூட்டங்களின் போதும்,
 

தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு குறைந்ததேயன்றி முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. ஊரடங்கு அமலில் இருக்கும் போதே நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு வரும் 24ம் தேதியோடு முடிவடைகிறது.

இதனால், ஊரடங்கை நீடிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இரு கூட்டங்களின் போதும், கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் சில தளர்வுகள் கூட, இந்த முறை வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் இன்று பிற்பகலுக்குள் ஊரடங்கு பற்றிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு கூறியுள்ளார். ஊரடங்கு குறித்த முழு விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.