×

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகம் எடுப்பதால் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடந்த வாரத்தில் இருந்து தமிழக அரசு அறிவித்தது. 2 வது ஞாயிற்று கிழமையான இன்று அத்தியவசிய தேவை கடைகளான காய்கறி, கடைகள் மளிகை கடைகள் இறைச்சி கடைகள் என அனைத்தும் மூடப்படப்பட்டு, பால் கடை மற்றும் மருந்தகம் மட்டுமே திறந்து இருந்தது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி
 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகம் எடுப்பதால் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடந்த வாரத்தில் இருந்து தமிழக அரசு அறிவித்தது. 2 வது ஞாயிற்று கிழமையான இன்று அத்தியவசிய தேவை கடைகளான காய்கறி, கடைகள் மளிகை கடைகள் இறைச்சி கடைகள் என அனைத்தும் மூடப்படப்பட்டு, பால் கடை மற்றும் மருந்தகம் மட்டுமே திறந்து இருந்தது.

இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக விருத்தாச்சலம் நகராட்சி அறிவித்துள்ளது. மக்கள் நடமாடவும், வணிக நிறுவனங்கள் செயல்படவும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.