×

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில்!

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?என்ற கேள்விக்கு அமைச்சர் ஆர். பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்ததாகத் தெரியவில்லை. நேற்று ஒரே நாளில் 5,337 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே பொது முடக்கம் தளர்த்தப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பியுள்ளனர். ஆனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ‘தமிழகத்தில் மீண்டும் முழு
 

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?என்ற கேள்விக்கு அமைச்சர் ஆர். பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இருப்பினும் தொற்று  குறைந்ததாகத் தெரியவில்லை. நேற்று  ஒரே நாளில் 5,337 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது.  இதனிடையே பொது முடக்கம் தளர்த்தப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு  வாழ்க்கைக்குத் திருப்பியுள்ளனர். ஆனால் மீண்டும் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு  அமல்படுத்தத்  தேவையோ, சூழலோ தற்போது இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைப்பது எப்போது என கேள்வி கேட்கப்பட்டதற்கு  எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் ‘ என்றார்.