×

"ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள்!" - தமிழக வாக்காளர்களுக்குப் பிரதமர் மோடி தமிழில் வேண்டுகோள்..!

 

பிரதமர் நரேந்திர மோடிதனது எக்ஸ் (X) தளத்தில் தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்குத் தமிழில் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் இளைய தலைமுறையினரும், பெண்களும் முன்வந்து அதிக அளவில் திரண்டு வாக்களித்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய சாதனை அளவிலான வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்பதை உணர்த்தும் வகையில் பிரதமரின் இந்த அழைப்பு அமைந்துள்ளது.