எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயம் விற்பனைக்கு தடை
எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்களின் பெருங்காயம் தரமற்றவை என கண்டறியப்பட்டதால், அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பிராண்டில் தயாரிக்கப்படும் பெருங்காயத்தூள் தரமற்றவையாக இருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெருங்காயத்தின் தரம் குறித்து நுகர்வோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, முதன்மை ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள், எவரெஸ்ட் மற்றும் எல்ஜி ஆகிய இரண்டின் கலப்பு பெருங்காயப் பொருட்களும் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போதுள்ள தரமற்ற தயாரிப்புகள் அனைத்தையும் தாமாகவே முன்வந்து திரும்பப் பெறுமாறும் (voluntary recall) உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறுகளை சரிசெய்யாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எவரெஸ்ட் பெருங்காயத்தில் நிர்ணயித்த அளவை விட குறைவான சத்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்ஜி மூலப்பொருள் பெருங்காயத்திலும் அதிக ஸ்டார்ச் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு பெருங்காயங்களிலும் 0 முதல் 3% மட்டுமே ஆல்கஹால் கரையக்கூடிய சாறு இருந்தது. குறைந்தது 5% இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.