×

புதிய எம்.எல்.ஏக்களுக்கு எப்போதிலிருந்து சம்பளம்?

 

புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது என்று சட்டப்பேரவை செயலர் உத்தரவு  வெளியிட்டுள்ளார். 

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இச்சூழலில் 2026 தேர்தலில் என்டிஏ கூட்டணி மீண்டும் வென்றது. இச்சூழலில்   புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் தயாளன் பிறப்பித்த உத்தரவில், "15வது புதுச்சேரி சட்டப்பேரவை துணைநிலை ஆளுநர் ஆணைப்படி மே 5ம் தேதியன்று கலைக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிட்டவுடன் 15வது சட்டப்பேரவை நிறைவடைந்தது. புதிதாக 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்துவிட்டதால் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 76வது பிரிவின் கீழ் 15 வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு முதல்வர் ராஜிநாமா கடிதம் தரவேண்டியதில்லை. 16வது சட்டப்பேரவையில் முதல்வர், பேரவைத்தலைவர் பொறுப்பு ஏற்கும் வகையில் தற்போது இப்பொறுப்புகளில் உள்ளோரே தொடர்வார்கள். மேலும் 15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் 15.6.26 வரை இருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டதால் இப்போது சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது.

மேலும், 15வது சட்டப்பேரவையில் அங்கம் வகித்த பழைய எம்.எல்.ஏக்களுக்கு இம் மாதம் 5 ஆம் தேதி வரை சம்பளம் வழங்கப்படுகிறது. புதிய எம்.எல்.ஏக்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த  6 ஆம் தேதியிலிருந்து சம்பளம் வழங்கப்படும். பெரும்பான்மை பலம் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க எப்போது உரிமைக் கோருகிறாரோ அப்போது துணைநிலை ஆளுநர் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்.