சோப், ஷாம்பு முதல் பிஸ்கட் வரை... அடுத்த மாதம் அதிரடியாக உயரும் விலை! பின்னணி என்ன?
FMCG பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வரும் செப்டம்பரில் இந்த விலை உயர்வு இருக்கும் என்பதால், பொதுமக்களின் பட்ஜெட் பெரியளவில் பதம் பார்க்க வாய்ப்புள்ளது.
தற்போது எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், சர்க்கரை மற்றும் பாமாயில் மூலப்பொருள்களும் உயர்ந்துள்ளன. இத்தகையில் லாப வரம்புகளை காப்பாற்றிக்கொள்ள நிறுவனங்கள் மீது அழுத்தம் அதிகமாகி உள்ளது.
2026-27 நிதியாண்டில் ஜூன் காலாண்டில், FMCG துறை சராசரியாக சுமார் 2-5% வரை விலைகளை உயரத்தியிருந்தது. FMCG துறையானது பொருளின் எடையைக் குறைத்தல் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் விலைகளை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், எந்தெந்த FMCG நிறுவனங்கள் அதன் தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்துகின்றன என்பதை இங்கு காணலாம்.
- பிஸ்கட் தயாரிப்புகளில் பிரிட்டானியா நிறுவனம் அதிகளவில் ஈடுபடுகிறது. பிஸ்கட்களின் விலையை குறைக்காமல், அதே விலைக்கு குறைந்த எடையில் பிஸ்கட் தயாரிப்பை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகள் சந்தையில் இருக்கும், ஆனால் எடை மட்டும் குறையும் என தெரிகிறது. இதனால், லாபத்தை ஈடுகட்ட வாய்ப்புள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL)
நமது அன்றாட தேவைகளான Surf Excel, Rin போன்ற சலவைத் தூள்கள்; Lux, Dove போன்ற குளியல் சோப்புகள், Clinic Plus, Sunsilk போன்ற ஷாம்பு பிராண்டுகள் மற்றும் டூத்பேஸ்ட் ஆகியவற்றின் விலைகளை அந்நிறுவனம் அதிகரிக்கக்கூடும்.
மற்ற நிறுவனங்களின் நிலை
- விலைகளை உயர்த்த தயாராகும் மற்ற நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களில் Dabur மற்றும் Godrej Consumer Products ஆகியவையும் அடங்கும். இந்நிறுவனங்கள் இந்த காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தயாரிப்பு பிரிவுகளில் விலைகளை உயர்த்த உள்ளதாக தெரிகிறது.
- Godrej Consumer Products Limited ஜூன் காலாண்டில் சாரசரியாக சுமார் 5% விலைகளை உயர்த்தியது. நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் தற்போது பருவமழை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் El Nino-வின் சாத்தியமான தாக்கம் ஆகியவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.