×

தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது

 

சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

தாம்பரம்- சானடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச்செல்லும் காலி சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 3 வாரங்களாக தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு செய்து புறப்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டது. விபத்தில் சரக்கு ரயிலில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ரயில் சேவையில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.