சமையலறை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை..! - இல்லத்தரசி கூப்பன் குறித்து கனிமொழி எம்.பி. உருக்கம்..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 30) திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
சமையலறையில் இருந்து சீக்கிரம் விடுதலை கிடைப்பதற்கான திட்டம்தான் இந்தக் கூப்பன் திட்டம்.
ஒரு வாஷிங் மெஷின் வாங்கும்போது கையில் துவைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் குறையும். பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும்போதும் அவர்களது நேரம் சேமிக்கப்படும். அந்த நேரத்தில் அவர்கள் வேறு வேலைகளைச் செய்ய இயலும். இது இன்னொரு முதலீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கூப்பன் கொடுக்கும்போது ‘இந்தப் பொருட்களைத்தான் நீங்கள் வாங்க வேண்டும்’ என்ற கட்டாயம் இல்லை. எங்கள் வீட்டில் ஏற்கெனவே ஒரு பிரிட்ஜ் இருக்கலாம். அப்படி இருக்கும்போது நாம் மீண்டும் பிரிட்ஜ் கொடுப்பது அவர்களுக்கு பயனற்றதாக மாறிவிடும்.என்றார்.