×

பெண் பயணிகளின் கவனத்திற்கு… இலவச பயணச்சீட்டு இன்று முதல் விநியோகம்!

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுமென சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார். அதன் படியே, தான் அரியணையில் அமர்ந்த முதல் நாளே பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். சில நாட்களுக்கு பின்னர் அத்திட்டம் அமலுக்கு வந்தது. சாதாரண பேருந்து கட்டணம் இருக்கும் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். பிற
 

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுமென சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார். அதன் படியே, தான் அரியணையில் அமர்ந்த முதல் நாளே பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். சில நாட்களுக்கு பின்னர் அத்திட்டம் அமலுக்கு வந்தது.

சாதாரண பேருந்து கட்டணம் இருக்கும் பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். பிற போர்டுகள் கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையில் காணப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை வெள்ளை போர்டு கொண்டிருப்பதில்லை. இதனால், சென்னைவாசிகளுக்கு இத்திட்டம் பயனளிக்கவில்லை என்றாலும் பிற மாவட்ட மக்கள் பெரிதளவில் பயனடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச பயணசீட்டு வழங்கப்படுமென போக்குவரத்துறை அறிவித்தது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை கண்டறிய டிக்கெட் தர முடிவு செய்திருப்பதாக விளக்கம் அளித்திருந்தது. அதன் படி, தமிழகத்தில் உள்ள மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் மகளிருக்கான இலவச பயண சீட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் இலவச டிக்கெட்டை நடத்துனரிடம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.