×

இலவச நீட் பயிற்சி மையம் இன்று முதல் தொடக்கம்!

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இணைய வழியில் நடக்கும் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பிளஸ் 1 பதிவு எண்ணை பதிவிட்டு கலந்து கொள்ளலாம். 2021 நீட் தேர்வு நடைபெறும் முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்
 

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இணைய வழியில் நடக்கும் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பிளஸ் 1 பதிவு எண்ணை பதிவிட்டு கலந்து கொள்ளலாம். 2021 நீட் தேர்வு நடைபெறும் முந்தைய வாரம் வரை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துவரும் சூழலில், இன்று முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்த கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு 2021ஆம் ஆண்டிற்கும் பயிற்சி அளிக்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக இணையவழி நீட் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், விருப்பம் உள்ள மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 4 மணி நேரம் வகுப்பு மற்றும் 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.