×

நவம்பர் 1ம் தேதி முதல் இலவச நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நவ.1 முதல் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த செப்.13ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியாகின. அரசு பள்ளி மாணவர்களின் கனவை நீட் தேர்வு கலைப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தேர்வு முடிவில் அரசு பயிற்சி மையங்களில் பயின்ற 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தது வியப்பை ஏற்படுத்தியது. அரசு
 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நவ.1 முதல் நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த செப்.13ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியாகின. அரசு பள்ளி மாணவர்களின் கனவை நீட் தேர்வு கலைப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தேர்வு முடிவில் அரசு பயிற்சி மையங்களில் பயின்ற 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

அரசு பள்ளி மாணவர்களால் இந்த தேர்வை நிச்சயம் எதிர்கொள்ள முடியும் என்பதை, மாணவர்கள் நிரூபித்து விட்டனர். இதனிடையே, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் நவ.1ம் தேதி முதல் இலவச நீட் தேர்வு பயிற்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து
கோவை தனியார் அமைப்பு 2021க்கும் பயிற்சி அளிக்கவிருக்கிறது.