×

“வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு கட்டித்தரப்படும்” : முதல்வர் பழனிசாமி உறுதி!

தமிழகத்தில் வீடில்லாத மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் சென்னை அசோக் நகரில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது எந்த பணியையும் செய்யாமலிருந்தார். தற்போது வேண்டுமென்றே அதிமுகவின் நலத்திட்டங்களை விமர்சித்து வருகிறார். நீட்
 

தமிழகத்தில் வீடில்லாத மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அந்தவகையில் சென்னை அசோக் நகரில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது எந்த பணியையும் செய்யாமலிருந்தார். தற்போது வேண்டுமென்றே அதிமுகவின் நலத்திட்டங்களை விமர்சித்து வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்யுமாறு ஸ்டாலின் கொடுக்கிறார். அதைக் கொண்டு வந்தது அவர்கள்தான்; மக்களை குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் ஸ்டாலின். மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையிலான ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் ஏழை மக்கள் இல்லாத நிலையை அதிமுக அரசு உருவாக்கி வருகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்; சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஏழை மக்களுக்கு அதிமுக அரசு வீடு கட்டித்தரும். 5 ஆண்டுகளில் வீடு இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம்” என்றார்.