×

'முதல்வரான பிறகு முதல்முறையாக' கிராமசபை கூட்டத்தில்  மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

 

உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா  காரணமாக ஊரடங்கு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் காந்தி ஜெயந்தி தினமான இன்று கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக கிராமசபை கூட்டங்கள் நடைபெறாத நிலையில் பல அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி இன்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.


இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். காந்தி பிறந்த நாளையொட்டி பாப்பாபட்டியில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டத்தில்  முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு .க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கிராமசபை கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டிருக்கிறார். இதனிடையே கிராம சபை கூட்டத்திற்கு வரும் வழியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து வரிகளின் குறைகளையும் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது பாப்பப்பட்டியில் இருந்து மதுரைக்கு இன்று முதல் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  பெண் வைத்த கோரிக்கையை ஏற்று கிராம சபை கூட்டத்திலேயே ஆணை பிறப்பித்துள்ளார்.