×

நாளை முதல் இலவச பஸ் பாஸ் : இவர்களுக்கு மட்டும்!

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ் நாளை முதல் வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்தவுடன் பேருந்து சேவை தொடங்கிய போதும், முதியவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் சேவை தொடங்கப்படவில்லை. பல மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக செல்லும் பஸ் பாஸை முதியவர்கள் நாளை முதல் பெறலாம் என அறிவிப்பு
 

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த முதியவர்களுக்கான இலவச பஸ் பாஸ் நாளை முதல் வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்தவுடன் பேருந்து சேவை தொடங்கிய போதும், முதியவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் சேவை தொடங்கப்படவில்லை. பல மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக செல்லும் பஸ் பாஸை முதியவர்கள் நாளை முதல் பெறலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இலவச பஸ் பாஸுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்களும் www.mtcbus.tn.gov.in என்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் மாதத்திற்கு 10 டிக்கெட்டுகள் வீதம் 6 மாதத்திற்கு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 21 பணிமனைகள், 19 பஸ் ஸ்டான்டுகளில் இலவச பஸ் பாஸ் நாளை முதல் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.