×

முன்னாள் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் திடீர் இடமாற்றம் – அரசு உத்தரவு!

ஆட்சி மாற்றம் நடந்தாலே அதிகார மட்டத்தில் மாற்றம் நிகழும் என்பது அதிகார அரசியலில் எழுதப்படாத விதி. கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள், ஊழலுக்கு துணைபோனவர்கள், முந்தைய அரசால் நெருக்கடிக்குள்ளானவர்கள், நெருக்கமானவர்கள் என பலரையும் மாற்றி புதிய அரசு உத்தரவிடும். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பசையுள்ள துறைகளும் பசையுள்ள துறைகளில் இருந்தவர்கள் சாதா துறைகளின் அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்த திமுக அரசும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தனது நான்கு தனிச் செயலர்களை நியமித்ததுலேயே
 

ஆட்சி மாற்றம் நடந்தாலே அதிகார மட்டத்தில் மாற்றம் நிகழும் என்பது அதிகார அரசியலில் எழுதப்படாத விதி. கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள், ஊழலுக்கு துணைபோனவர்கள், முந்தைய அரசால் நெருக்கடிக்குள்ளானவர்கள், நெருக்கமானவர்கள் என பலரையும் மாற்றி புதிய அரசு உத்தரவிடும். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பசையுள்ள துறைகளும் பசையுள்ள துறைகளில் இருந்தவர்கள் சாதா துறைகளின் அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்த திமுக அரசும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தனது நான்கு தனிச் செயலர்களை நியமித்ததுலேயே அனைவரது பாராட்டையும் பெற்றார். அந்த நால்வரும் மிகவும் திறமையான குறிப்பாக நேர்மையான நிர்வாகிகள். இதேபோல அதிகார மட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த நான்கு தனிச் செயலர்கள் டம்மி துறைக்கு மாற்றப்பட்டனர்.

இச்சூழலில் நேற்று 21 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று 6 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் சுகாதாரத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா தான் பீலா ராஜேஷை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது எனலாம். அவர் தினமும் கொரோனா நிலவரம் குறித்து கூறவரும் பேட்டியைக் காணவே பெரும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா நிலவரத்தைத் தெரிந்துகொள்ள அல்ல. அவர் என்ன புடவை கட்டி வருகிறார் என்பதைப் பார்க்க அந்தக் கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து ஒரு மாதம் கவுன்ட் சொல்லிக்கொண்டிருந்த பீலா ராஜேஷ் ஓரங்கட்டப்பட்டார். அதற்கான காரணமும் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக தற்போது சுகாதாரத் துறை செயலராக நீடிக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். பீலா ராஜேஷ் வணிகவரித் துறை செயலாளராக இடமாற்றப்பட்டார். தற்போதைய திமுக அரசு அவரை கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.