முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அமெரிக்கா செல்ல நீதிமன்றம் மறுப்பு..!
இதய சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.விசாரணை முடிவில், அசோக் குமார் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
யார் இந்த அசோக் குமார்?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர். இவர் இந்த வழக்கில் தொடர்புடையவர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த காலத்தில், அசோக் குமார் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு ஆஜராகவில்லை என்றும், தலைமறைவாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.தற்போது, அசோக் குமார் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சுமார் 5000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.