#BREAKING அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் விலகல்
அதிமுக அமைப்பு செயலாளரும் காட்டுமன்னார்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான முருகுமாறன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முருகுமாறன் கடிதம் எழுதியுள்ளார். முருகுமாறன் 2011, 2016 என 2 முறை அதிமுக சார்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர் உண்டு அவர்களில் நானும் ஒருவன் என்றும் கடிதத்தில் முருகுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திட்டக்குடி (SC) தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுப் போட்டியிட்ட இவர், அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்தவரான இவர், இளநிலை விவசாயப் பட்டமும் (B.Sc. Agriculture) மற்றும் திருப்பதி சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் பட்டமும் (B.L.) பெற்றுள்ளார். மேலும் இவர் விவசாயம் மற்றும் வழக்கறிஞர் தொழிலையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.