உதயநிதிக்கு சுட சுட பிளாஸ்க்கில் டீ கொடுத்த முன்னாள் அமைச்சர்!
கடலூர் சுங்கச்சாவடி வந்த உதயநிதியை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தில், பிளாஸ்க்கில் டீயும், டம்ளரும் கொடுத்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன்.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, ''ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார். அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம். என்ன பொய் கேஸ் போடலாம்'' என தெரிவித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ''திரிஷா… திரிஷா...'' என கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி, ''எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்'' என்றார். திரிஷா, திரிஷா என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய உடனே உதயநிதி இவ்வாறு பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதியின் கைதுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் காவல் துறை வாகனம் திருச்சியை அடைந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் திருச்சியைத் தாண்டி விசாரணை நடைபெற உள்ள தஞ்சை மாவட்டத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி போலீஸ் வாகனம் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் நின்ற நிலையில் அவருக்கு தேநீர் கொடுக்கப்பட்டது. திட்டக்குடி திமுக எம்.எல்.ஏ. கணேசன், போலீஸ் வாகனத்தின் உள்ளே அமா்ந்திருந்த உதயநிதி உள்ளிட்டோருக்கு டீயும், டம்ளரும் கொடுத்தார்.