×

திமுகவினர் ஷாக்..! பாஜகவில் இணைந்த திமுக முனனாள் மாநில நிர்வாகி..!

 

திமுகவின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த மதுரையைச் சேர்ந்த ஆர்.கே.வி. ராஜா, திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.

அதன்படி, நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஆர்.கே.வி.ராஜா பாஜகவில் இணைந்தார்.

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றும், அதற்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். பாஜகவின் கொள்கைகள் மற்றும் பிரதமரின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாகவும் ஆர்.கே.பி.ராஜா குறிப்பிட்டார்.