×

நடிகை சௌகார் ஜானகி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

 

தென்னிந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஆக.21) காலமானார். அவருக்கு வயது 94.

சௌகார் ஜானகியின் உடல் நாளை தகனம் செய்யப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதிச் சடங்கின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என சௌகார் ஜானகியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த சௌகார் ஜானகி, நேற்று மதியம் 2 மணியளவில் இயற்கை எய்தினார்.

இந்நிலையில் சௌகார் ஜானகி உடலுக்கு முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார்.

#WATCH | சௌகார் ஜானகி உடலுக்கு முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன்#SowcarJanaki #masubramanian #ripsowcarjanaki #News18TamilNadu pic.twitter.com/1IKKYuF82j

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 22, 2026